சுற்றுலா திட்டத்திற்கு ரூ.131 கோடி கொடுங்க: அமைச்சர் கோரிக்கை
சுற்றுலா திட்டத்திற்கு ரூ.131 கோடி கொடுங்க: அமைச்சர் கோரிக்கை
UPDATED : அக் 09, 2026 01:11 AM
ADDED : அக் 09, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா திட்டத்திற்கு ரூ.131 கோடி ரூபாய் தர வேண்டும் என மத்திய அரசிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.
டில்லி மத்திய சுற்றுலாத்துறை இணை செயலாளர் சுவேஷ் தாஸை, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சந்தித்தார். அப்போது அனைத்து பிராந்தியங்களிலும் சுற்றுலா வளர்ச்சியடைய மத்திய அமைச்சகம் செய்து வரும் நிதி உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தார்.மேலும், ரூ.131 கோடி மதிப்பிலான புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, காந்தி திடல் ஆகிய பகுதிகளை மேம்படுத்தவும், சுற்றுலாப்பயணிகள் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவும் கருத்துரு ஒன்றை கூடுதல் செயலரிடம் சமர்ப்பித்தார்.
