சரக்கு வேன் தீப்பிடித்து சேதம் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
சரக்கு வேன் தீப்பிடித்து சேதம் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
UPDATED : அக் 09, 2026 01:02 AM
ADDED : அக் 09, 2026 01:00 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மினி சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த சிறுளாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார், 24; மினி சரக்கு வேன் உரிமையாளர். இவர், நேற்று பண்ருட்டியில் இருந்து கெடிலம் நோக்கி வேனை ஓட்டி வந்தார். இரவு 8:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த தேவியானந்தல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, டிரைவர் சீட்டுக்கு அருகே புகை வந்ததால், வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். உடன் வேன் தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த திருநாவலுார் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வேன் முற்றிலும் எரிந்து சேதமானது.
திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
