UPDATED : அக் 09, 2026 12:59 AM
ADDED : அக் 09, 2026 12:57 AM
அ நிறம் | அளவு
நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் சப் இன்ஸ்பெக்டர்கள் மாதேஸ்வரன், சேகர் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடக்குத்து, எஸ்.பி.டி.எஸ்.,நகர் முந்திரி தோப்பில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள், மேல் வடகுத்து அன்பரசு, 35; விஜயகுமார், 50; ராஜா, 54; கீழுர் ஆறுமுகம், 47; ஆயிப்பேட்டை குமார், 45; என்பது தெரியவந்து அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் பணம், 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தப்பியோடிய பெருமாத்துார் சசிக்குமார், மனோகர், சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
