ADDED : மார் 28, 2026 05:06 AM
புதுச்சேரி: ஆலங்குப்பத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, ஆலங்குப்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக டி.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நாகராஜ் உத்தரவின் பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் அனந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். கடையில் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 13.5 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் ஆலங்குப்பத்தை சேர்ந்த செல்லப்பன், 47; விற்பனைக்கு உடந்தையாக இருந்த தட்டாஞ்சாவடி ஜெயக்குமார், 47; கல்மண்டபம் கணபதி லால், 42, ஆகியோரை கைது செய்தனர்.
