/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம் ரூ.97 ஆயிரம் 'அபேஸ்'
/
4 பேரிடம் ரூ.97 ஆயிரம் 'அபேஸ்'
ADDED : பிப் 14, 2026 04:22 AM
புதுச்சேரி: 4 பேரிடம் ரூ. 97 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் ஆன்லைனில் மொபைல் போன் வாங்க விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் புதிய ஆப்பிள் போனை குறைந்த விலைக்கு தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 70 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல் கருவடிக்குப்பத்தை சேர்ந்த பெண் 11 ஆயிரத்து 999 ரூபாய், வில்லியனுார் நபர் 13 ஆயிரத்து 150, முத்திரையர்பாளையம் பெண் 2 ஆயிரத்து 500, என, மொத்தம் 97 ஆயிரத்து 649 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

