/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு துவக்க விழா
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு துவக்க விழா
ADDED : அக் 02, 2025 01:48 AM

புதுச்சேரி: 1925-ல் கேசவ பலிராம் ஹெட்கேவர் என்ற மாபெரும் தீர்க்கதரிசி ஆர்.எஸ்.எஸ்., என்னும் ராஷ்ட்ரிய சுய சேவக் சங்கத்தை துவக்கினார்.
அவர் விதைத்த விதை இன்று ஆலமரமாக வேர்பரப்பி நுாற்றாண்டினை நோக்கி தேச சேவையில் முன்னணி தொண்டு செய்யும் அமைப்பாக திகழ்கிறது.
எல்லாவற்றையும் விட தேசம் முக்கியம் என்ற ஒற்றைக் கொள்கைக்கு வியர்வையும், சில சமயத்தில் ரத்தத்தையும் கொடையாக தந்து இந்த அமைப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியல் குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கரில் தொடங்கி ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வரை தொடர்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.,சால் வளர்க்கப்பட்டவர்கள் இந்த தேசத்தை நேசித்து அதை உலகின் விஸ்வ குருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தங்களை மெழுகுவர்த்தி போல உருக்கிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயில் இருந்து இந்நாள் பிரதமர் மோடிஜி வரை சில, பல மெழுகுவர்த்திகள் நம் கண்ணுக்குத் தெரிகின்றன.
தெரியாமல் எரியும் விளக்குகளாக பலர் நாடு முழுவதும் எளிமையும், நேர்மையும், தேச கடமையும் கொண்டு இருக்கின்றனர்.
கலாசாரம் விழிப்புணர்வு,ஒழுக்கம்,சேவை,சமூக பொறுப்பு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு சென்று அதன் மூலம் தேச வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது.
விடுதலைக்கு பிறகு இந்த நாட்டை மேற்கத்திய கலாசார கொண்டாட்டங்களுக்கான இடமாக்க நடந்த முயற்சிகளை முறியடித்து, பாரதத்தின் பழம்பெரும் சிறப்புகளை இன்று ஆர்.எஸ்.எஸ்., வழி வந்தவர்கள் உலகிற்கு எடுத்துக் காட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
பாரதத்தை மறுகட்டுமானம் செய்யும் பணியில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு பயணத்தை தொடர்கிறது. பக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல், தலைமைப் பண்பு முதலான நற்குணங்களின் சொர்க்கமாக திகழ்ந்த பாரதத்தின் பெருமைகளை ஆர்.எஸ்.எஸ்., வார்த்தெடுத்த தலைவர்கள் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பிரச்சாரம் என்ற ஆரம்ப பணியில் இருந்து ஒவ்வொரு ஸ்வயம் சேவகர்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர்.
இயற்கை பேரிடர்கள் எங்கே நடந்தாலும் முதல் சேவகனாக ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் இருப்பார் என்ற நம்பிக்கை இன்று வரை பொய்க்காமல் செயல்பட்டுக்கொண்டு இருக் கிறது. தேசமே முக்கியம் என்ற பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு சுயம் சேவகரும் இந்த நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு உயர்வு கிடைப்பதில் தயக்கமின்றி பங்காற்றி வருகின்றனர்.
அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பல வரலாற்று சாதனைகளை செய்திருக்கிறது. இன்னும் பல நுாறாண்டுகளுக்கு பாரதத்தின் அழியா பெருமைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் துாதுவராக ஆர்.எஸ்.எஸ்., திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வரலாறு எப்போதும் தகுதி படைத்ததை தனதாக்கி கொள்ளும். அது அதன் இயல்பு.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை மட்டும் வரலாறு தனது சாதனையாக கொண்டாடி மகிழும். அந்த அளவிற்கு அந்த அமைப்பில் சுயம் சேவகர்களாக பணியாற்றுவோர் தியாக சீலர்களாக, கொள்கை மறவர்களாக, கலாசார துாதுவர்களாக, உலகின் விஸ்வகுருவாக பாரதத்தைப் பார்க்க விரும்புவார்கள்.
அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு துவக்க விழாக்காலத்தில் அதன் சிறப்புகளை நினைவுகூர்ந்து, அதன் வளர்ச்சியில் பங்காற்றி மகிழ்வோம். ஒவ்வொரு இந்தியருக்கும் அதற்கான கடமை இருக்கிறது என்பதை செல்வகணபதி எம்.பி., கூறினார்.