/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டையில் இன்று ருத்ர பூஜை
/
லாஸ்பேட்டையில் இன்று ருத்ர பூஜை
ADDED : பிப் 11, 2026 04:19 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை சோம்நாத் ஜோதிர் லிங்க ருத்ர பூஜை நடக்கிறது.
வாழும் கலை - வைதீக தர்ம சன்ஸ்தான் சார்பில், இன்று (11ம் தேதி) புதுச்சேரியில் சோம்நாத் ஜோதிர்லிங்க ருத்ர பூஜை என்ற ஆன்மிக நிகழ்ச்சி மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை லாஸ்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் சிவாச்சார்யார்கள், சிவனடியார்கள், புதுச்சேரியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். அனுமதி இலவசம்.
புதுச்சேரி மக்கள் புகழ் பெற்ற சோமநாத் ஜோதிர்லிங்கத்திற்கு ருத்ர பூஜையை காண வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அனுபவிக்கும் அனுபவமாகும் என, வாழும் கலை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

