/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது: பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை
/
நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது: பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை
நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது: பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை
நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது: பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை
ADDED : மார் 16, 2024 11:16 PM

புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து நன்னடத்தை விதிகள் நேற்று முதல் புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பொது, தனியார் இடங்களில் சுவர் விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்கள் வைத்து புதுச்சேரி அழகினை கெடுக்காமல் பாதுகாத்திட மாவட்ட தேர்தல் நிர்வாகம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித் துறை, மின்சார துறைகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சுவர் விளம்பரம், போஸ்டர்கள் அல்லது பேனர்கள், கட் அவுட்கள் போன்றவற்றை பொது இடங்களில் வைப்பது தேர்தல் நன்னடத்தைபடியும், புதுச்சேரி திறந்தவெளி (அழகின் சிதைவை தடுத்தல்) சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
பொது, தனியார் இடங்களில் சுவர் விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்கள் வைத்து புதுச்சேரி அழகினை கெடுக்காமல் பாதுகாத்திட மாவட்ட தேர்தல் நிர்வாகம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித் துறை, மின்சார துறைகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றது.
இந்த இடங்களில் விளம்பரங்கள் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், சுவர் விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்கள் வைக்கவும், வாகனங்களில் அனுமதி இல்லாமல் கட்சி கொடிகள், விளம்பரங்கள் போன்றவை வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களில் அரசியல் சம்பந்தமான கொடிகள், ஸ்டிக்கர்கள், படங்கள், விளம்பரங்கள் போன்றவைகளை உபயோகப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

