ADDED : பிப் 21, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: மங்கலம் தொகுதியை சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போ லீசில் அளித்துள்ளார்.
வில்லியனுார், தில்லை நகரை சேர்ந்தவர் மோகித் ரவிக்குமார்; ஆளும் கட்சி பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக மங்கலம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதி தனது ஆதரவாளர்கள் மூலம் சென்னையை சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் உதவியுடன், தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக, வில்லியனுார் போலீசில் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த புகார் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
