/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் கல்லுாரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி முகாம்
/
வேளாண் கல்லுாரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி முகாம்
வேளாண் கல்லுாரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி முகாம்
வேளாண் கல்லுாரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி முகாம்
ADDED : பிப் 11, 2026 04:24 AM

திருபுவனை: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி முகாம், காட்டேரிக் குப்பத்தில் நடந்தது.
இப்பயிற்சி முகாம், வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இதில், கல்லுாரியின் இறுதியாண்டு மாணவிகள் சுத்துக்கேணி விவசாயிகளுக்கு மாங்கன்றில் ஒட்டு கட்டுதல், ரோஜா மற்றும் மல்லியில் கிளை பதியம் போடுவது, கொய்யாவில் விண் பதியம் உள்ளிட் ட பதியம் முறைகள் குறித்தும், அதன் பயன்கள் மற்றும் பதியம் செய்வது குறித்த செயல்முறை வி ளக்கம் செய்து காண்பித்தனர்.