/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
க.குச்சிபாளையத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாம்
/
க.குச்சிபாளையத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாம்
ADDED : டிச 27, 2025 05:10 AM
திருபுவனை: திருபுவனை அடுத்த க.குச்சிபாளையம் கிராமத்தில் ஊரக வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மதகடிப்பட்டு உழவர் உதவியக வேளாண் அலுவலர் நடராஜன் மற்றும் வேளாண் இணை இயக்குனர் அலுவலக ஆத்மா திட்ட மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு தோட்டக்கலை மாணவிகள், பாரம்பரிய முறையில் எருக்கு இலை வைத்து போரான் சத்து பற்றாக்குறையை சமாளிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கினர்.
இந்த முறையில் எருக்கு இலையை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி அது நிலத்தடி சத்துக்களை மேம்படுத்துவதோடு பயிர்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது என விளக்கினர். முகாமில் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.

