/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊரக வாழ்வாதார ஊழியர்கள் போராட்டம்
/
ஊரக வாழ்வாதார ஊழியர்கள் போராட்டம்
ADDED : அக் 25, 2024 06:12 AM

புதுச்சேரி: ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர்.
சட்டசபை அருகே உள்ள ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே நேற்று மாலை தர்ணா போராட்டம் நடத்தினர். பொன்னி தலைமை தாங்கினார். ஜெசிந்தாமேரி, மஞ்சுளா, தினகரன் ் முன்னிலை வகித்தனர்.
சம்மேளத்தின் சார்பில், பிரேமதாசன், ரவிச்சந்திரன் உட்பட சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இயக்கத்தின் மூலம், ஊரக பகுதியில், சிறு தொழில், செய்ய தொழிற்கூடங்களை உருவாக்கி கொடுப்பது, மீன் வளர்ப்பது உள்ளிட்ட திட்டங்களை அமுல்படுத்த எந்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

