/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தர்ணா
/
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தர்ணா
ADDED : நவ 12, 2024 07:44 PM
புதுச்சேரி; பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வேலை வழங்கக்கோரி 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணீ நீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள், அரசு அறிவித்தபடி மீண்டும் வேலை வழங்ககோரி நேற்று முன்தினம் தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து, தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள கரி குடோனுக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, இரவு முழுதும் அப்பகுதியிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 2வது நாளாக நேற்று கரி குடோன் எதிரே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, போராட்டக்குழுவினர் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கவர்னரை சந்தித்து வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர்.