/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : ஜூலை 30, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தலாம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி காலை 7:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
பிற்பகல் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.