/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை
ADDED : மார் 02, 2024 06:18 AM

புதுச்சேரி : லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நேற்று சிறப்பு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணன் நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுத்தேர்வு நாட்களில் தினசரி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதையொட்டி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சகஸ்ரநாம அர்ச்சனை நேற்று நடந்தது. தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர் அர்ச்சனையில் பங்கேற்று வழிபட்டனர்.
இதுபோல் ஒவ்வொரு தேர்வு நாளிலும் சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை வேத ஆகம சம்ப்ரக் ஷண லஷ்மி சரஸ் மாருதி டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது.

