ADDED : ஜன 07, 2025 06:19 AM

புதுச்சேரி: தமிழ்நாடு லலிதா சகஸ்ரநாம பிரசார இயக்கம் சார்பில், சகஸ்ரநாம சக்ரம் வரைதல் மற்றும்  பூஜை பயிற்சி  முகாம் முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமை அமைச்சர்  லட்சுமிநாராயணன், விமலா லட்சுமி நாராயணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி  வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ண ஜகந்நாதன், புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாய கல்லுாரி முனைவர் முருகையன், முனைவர் ஞானஜோதி சரவணன்,  குருமாம்பேட் லலிதா  கோவில் மகேஸ்வர சாஸ்திரி, சிவன் நாட்டியாலயா ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்க நிறுவனர் பத்மராம் மற்றும் அவரது குழுவினர் ரஜினி விஸ்வா,   கிருஷ்ணமணி, லலிதா ராஜ்குமார், ஷீலா மனுவேல்  ஆகியோர் கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாமத்தின் மேன்மைகள், அதன் வரலாறு, பாராயண பலன்கள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து சக்ரம் வரையும் பயிற்சி மற்றும்  பூஜை முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.  ஏற்பாடுகளை   உஷா ரவி, திரிபுரசுந்தரி, தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

