ADDED : பிப் 14, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு தவளக்குப்பம் அயிற்றுார் மகாதேவர் சிவன் கோவிலில், நாளை (15ம் தேதி) மாணிக்கவாசகர் சைவ நெறி திருக்கூட்டம் நடக்கிறது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை கள் நடக்கிறது. தவளக்குப்பம் அயிற்றுார் மகாதேவர் சிவன் கோவிலில், வரும் 15ம் தேதி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதில், முதல் ஜாமம் பூஜை மாலை 6:00 மணியளவில் நடக்கிறது. தொடர்ந்து, மாணிக்கவாசகர் சைவ நெறி திருக்கூட்டம் நடக்கிறது. இரவு 9:00 மணியவில், இரண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம் நள்ளிரவு 12:00 மணிக்கும், நான்காம் ஜாமம் அதிகாலை 3:00 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
