/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணியில் இருந்து திரும்பாத செவிலிய அதிகாரிகள் சம்பளம் 'கட்' ; சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி உத்தரவு

ADDED : நவ 13, 2024 05:40 AM

புதுச்சேரி: சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்ற செவிலியர் அதிகாரிகள் தங்களின் நியமன இடத்திற்கு திரும்பவில்லை எனில் சம்பளம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு மூலம் தங்கள் வசிக்கும் பகுதி அல்லது பணி சுமை இல்லாத இடங்களுக்கு சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்று விடுகின்னர்.
இதனால் ஆளே வராத ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில் 12 செவிலியர்கள் என குவிந்து விடுகின்றனர்.
இதனால் நோயாளிகள் குவியும் அரசு மருத்துவமனை உள்ளிட்டவையில் செவிலியர், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால் மற்ற ஊழியர்களுக்கு பணி சுமை ஏற்படுகிறது. தரமான மருத்துவ சிகிச்சையும் கிடைப்பது இல்லை.
இதனால், சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்ற 35 செவிலியர் அதிகாரிகள் தங்களின் நியமன இடத்திற்கு திரும்ப கடந்த அக்டோபர் மாதம் சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ஏற்காமல் பல செவிலியர் அதிகாரிகள் தங்களின் நியமன இடத்திற்கு திரும்பவில்லை.
இதனால் இன்று 13ம் தேதிக்குள் சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்ற செவிலியர் அதிகாரிகள் தங்களின் நியமன இடத்திற்கு திரும்பவில்லை எனில் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என, சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.