/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
/
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
ADDED : மே 20, 2025 06:38 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கலைமாமணி ராமதாஸ் வரவேற்றார். கவுரவ தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் கோதண்டபாணி ஆண்டறிக்கை வாசித்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் தனகஜபதி வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்கப்பட்டது.
புதுச்சேரி மாநில சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திற்கு புதிய அலுவலகம் அமைப்பது, வள்ளலார் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, கணேசன் தலைவராகவும், கோபி (எ) கோபாலகிaருஷ்ணன் கவுரவ தலைவராகவும், கோதண்டபாணி பொது செயலாளராகவும், சீதாலட்சுமி துணை பொது செயலாளராகவும், ரவிக்குமார் செயலாளராகவும், தனகஜபதி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.