ADDED : ஆக 21, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் உலக நன்மை வேண்டி நடந்த, சமஷ்டி காயத்ரி மகா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் ஆவணி அவிட்டத்தையொட்டி, குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது. இதில் ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்த பிராமண சமூகத்தினர், பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை, சமஷ்டி காயத்ரி மகா யாகம் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் நடந்தது.

