/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொக்கு பார்க் வாய்க்காலில் மணல் குவியல் நகர பகுதிக்குள் வெள்ளம் மீண்டும் புகும் அபாயம்

ADDED : ஜன 02, 2025 06:50 AM

புதுச்சேரி: நகர பகுதிக்குள் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாற காரணமாக இருந்த கொக்குபார்க் வாய்க்காலில் குவிந்துள்ள மணலை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மழை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. நகர பகுதியில் 4 முதல் 5 அடி வரை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மக்களை மீட்டனர்.
இதற்கு முக்கிய காரணம் மேட்டு பகுதியான ஆரோவில் நாவற்குளம் பகுதியில் உருவாகி ஜீவானந்தபுரம் வழியாக கொக்குபார்க், சாரம் வழியாக செல்லும் வாய்க்கால் துார் வாரப்படாததால் மண் குவிந்து கிடந்தது.
பெருக்கெடுத்த ஓடி வந்த மழைநீர் வாய்க்கால் குவிந்துள்ள மணலால் உடைப்பு ஏற்பட்டு நகர பகுதிக்குள் புகுந்தது. ஆண்டு முழுதும் மேட்டு பகுதியில் இருந்து மழைநீர், கழிவுநீருடன் அடித்துவரப்படும் மணல் கொக்குபார்க், வினோபா நகர், ஜீவா நகர் வரை வாய்க்காலில் குவிந்து கிடக்கிறது.
இதனால் கடந்த மழையின்போது வாய்க்காலில் ஓடிவந்த மழைநீர் வினோபா நகர், புது தெரு, அன்னை தெரேசா நகர், கபீரேல் நகர், ஞானபிரகாசம் நகர், சக்தி நகர், சாரம், தென்றல் நகர், வெங்கடேஸ்வரா நகர், சின்னையன்பேட் போன்ற பகுதிகளுக்குள் புகுந்தது.
எதிர்காலத்தில் மீண்டும் நகர பகுதிக்குள் மழைநீர் புகாமல் இருக்க வாய்க்கால்களில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்றி, வாய்க்காலை ஆழப்படுத்துவதுடன், கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.