ADDED : ஜூலை 12, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: மாட்டு வண்டியில் மணல் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரையாம்புத்துார் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி சென்றனர். கரையாம்புத்துார் சாராயக்கடை வழியாக மாட்டு வண்டியை, ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்ததும், மாட்டை அவிழ்த்து விட்டு, வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றார். போலீசார் வண்டியை பார்த்தபோது, அதில், தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து மணல் திருட்டில் ஈடுபட்ட பேரிச்சம்பாக்கம் திருக்குமரன் 28; என்பவரை தேடி வருகின்றனர்.