ADDED : மே 09, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்:கரையாம்புத்துார் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் அடுத்த மணமேடு தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்படுவதாக கரையாம்புத்துார் போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சின்ன கரையாம்புத்துார் பஸ் நிறுத்தம் வழியாக மூட்டைகளுடன் பைக்கில் சென்ற விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பட்டறைபதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவியரசன் என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர், மணமேடு தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை திருடி மூட்டைகளாக கடத்தி வருவது தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, கவியரசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பைக்கையும் பறிமுதல் செய்தனர்.