நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் துப்புரவு முகாம்
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் துப்புரவு முகாம்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:38 PM
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துப்புரவு முகாம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு நெட்டப்பக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு துப்புரவு பணியினை துவக்கி வைத்தார். துப்புரவு பணியில் எச்.ஆர்.ஸ்கொயர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர்.
நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை பரித்து கொடுப்பதற்கான விழிப்புணர்வை என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன், பஞ்சாயத்து நோடல் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
