/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கரதாஸ் சாமிகள் நாடக விழா துவங்கியது
/
சங்கரதாஸ் சாமிகள் நாடக விழா துவங்கியது
ADDED : பிப் 21, 2025 04:51 AM

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கத்தில், கலை பண்பாட்டுத்துறை சார்பில், சங்கரதாஸ் சாமிகள் நாடக விழா, நேற்று துவங்கியது.
புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில், சங்கரதாஸ் சாமிகள் நாடக விழா, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில், இவ்விழா, நேற்று மாலை துவங்கியது.
சிறப்பு விருந்தினராக, அமைச்சர் திருமுருகன், பாஸ்கர் எல்.எல்.ஏ, பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி, வரும் 27ம் தேதி வரை பல்வேறு பெயர்களில் நாடகங்கள் நடக்கிறது.
ஆசையே அலைபாயுதே, சித்தர் சிவ வாக்கியர், யுத்த பூமி, பாச போராட்டம் ஆகிய நாடகங்கள் நேற்று நடந்தன. அதனை தொடர்ந்து, இன்று, சப்போட் சாமிநாதன், ஒளி பிறந்தது, நிறம் மாறிய பூக்கள், ஒரு தென்றல் புயலாகிறது, மாவீரன் சுந்தரலிங்கம் ஆகிய நாடகங்கள் நடக்கிறது.
தொடர்ந்து, நாளை, 22ம் தேதி, சாக்ரடீஸ், தீர்ப்புகள், அதிர்ஷ்டக்காரன், பழுத்த ஓலை, திருட வருகிறேன், நாளை மறுநாள் 23ம் தேதி, திணைகள், கொஞ்சம் நேரம், சிக்கலாம் வாங்க, நான் ரெடி, நீங்க ரெடியா, கலைஞன் ஆகிய நாடகங்கள் நடக்க உள்ளது.
தொடர்ந்து, 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பல்வேறு தலைப்புகளின் நாடகங்கள் நடக்க உள்ளது. இவ்விழாவில், 35 நாடக குழுக்கள், 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு, நாடகங்களை நடத்த இருக்கின்றனர்.