ADDED : நவ 19, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எம்.எஸ்.எம்.இ., காலாப்பட்டு அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை சார்பில் அக்கிரா மியாவாக்கி அடர்வன காடுகள் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
அறக்கட்டளையின் நிறுவனர் பிரவின்குமார் வரவேற்றார். எம்.எஸ்.எம்.இ., யின் துணை பொதுமேலாளர் அமித் நாயன் தலைமை தாங்கினார்.
கெம்ஃபேப் அல்கலிஸ் லிமிடட் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் கண்ணப்பன், கட்டட பொறியாளர் இளங்கோ, மனிதவள நிர்வாகி ராஜா மற்றும் அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளையின் தன்னார்வலர் ராஜா நன்றி கூறினார்.
தொடர்ந்து, அக்கிராமியாவாக்கி அடர்வன காடுகளை உருவாக்கும் வகையில், நாட்டு வகைகளை சார்ந்த 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை விஷ்னு மற்றும் சதிஷ் செய்திருந்தனர்.

