/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
/
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூலை 04, 2025 02:21 AM

புதுச்சேரி: கூட்டுறவு அமைச்சகத்தின் 4ம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மத்திய அரசின் கூட்டறவு அமைச்சகம், புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையின் வழிகாட்டுதலின் படி, பன்னாட்டு கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் 4ம் ஆண்டு நிறுவன நாள் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஸ்வந்தையா தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.
விழாவில், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ராமபிரசாத், மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகி சாரங்கபாணி, கூட்டுறவு துணை பதிவாளர் குணசேகரன், மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் வீர வெங்கடேஸ்வரி, கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் இரிசப்பன், முதுநிலை கணினி விரிவுரையாளர் ரங்கநாதன், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் எக்கோ கிளப் பொறுப்பு ஆசிரியை லஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.