ADDED : அக் 04, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், திருவாண்டார்கோவில் கிராமத்தில், ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு இருந்தது.
அதன் ஒரு பகுதியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருவாண்டார்கோவில் கிராமத்தில், விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரம் நடும் விழா நடந்தது. கிராம மக்கள் கலந்து கொண்டு, ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை, ஈஷா கள பணியாளர் அசோக் செய்திருந்தார்.