/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
/
3 பேர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
ADDED : ஏப் 06, 2025 08:07 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று வாலிபர்களை வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
புதுச்சேரி, ரெயின்போ நகரில் உழவர்கரை வின்சென்ட் வீதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தெஸ்தான் மகன் ரஷி, 20; மற்றும் அவரது நண்பர் உருளையன்பேட்டை திடீர் நகர் தேவா (எ) தேவக்குமார், 21; மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் மெயின்ரோட்டை சேர்ந்த ஆதி (எ) ஆதித்யா, 20; ஆகியோர் கடந்த பிப்., 14ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பிரபல ரவுடியான சத்யா, 27; சஞ்சிவி, 22; சரண், 20; சக்திவேல், 21; விஷ்ணு, 20; சாரதி, 24; வெங்கடேசன், 25; ரவிந்திரகுமார், 20; காமேஷ், 28, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சத்யாவின் அண்ணன் சங்கர், நேற்று முன்தினம் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைத்தனர்.
இதையடுத்து, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, ரவுடி சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெரியக்கடை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

