ADDED : அக் 21, 2026 12:47 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடந்து வரும் சத சண்டி ஹோமம் நிறைவு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சத சண்டி ஹோமம் நடந்து வருகிறது. நேற்று பத்தாவது நாள் நிறைவு விழாவில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதில், அம்மன் சண்டி மஹாதேவி மஹாகாளி அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து மாலை நடைபெற்ற 64 யோகினி, பைரவர் பலியுடன் சண்டிஹோமம் நிறைவடைந்தது. விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.
