/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சற்குரு கணபதி சுவாமிகள் குரு பூஜை விழா இன்று துவக்கம்
/
சற்குரு கணபதி சுவாமிகள் குரு பூஜை விழா இன்று துவக்கம்
சற்குரு கணபதி சுவாமிகள் குரு பூஜை விழா இன்று துவக்கம்
சற்குரு கணபதி சுவாமிகள் குரு பூஜை விழா இன்று துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 11:43 PM

புதுச்சேரி: சற்குரு கணபதி சுவாமிகளின் குரு பூஜை விழா இன்று நடக்கின்றது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சற்குரு கணபதி சுவாமிகள் சித்தர் பீடத்தில் 24ம் ஆண்டு மகா குரு பூஜை விழா நேற்று காலை 9:00 மணிக்கு தீபாராதனையுடன் துவங்கியது.
தொடர்ந்து, காலை 9:15 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நடந்தது.
மாலை 4:30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு சன்மார்க்க பஜனை, இரவு 11:00 மணிக்கு திருவடி திருவமுத பஜனை நடந்தது.
இரண்டாம் நாளான இன்று 2ம் தேதி காலை 6:00 மணிக்கு பிரணவ கொடியேற்றத்துடன் சற்குரு கணபதி சுவாமிகளின் குரு பூஜை விழா துவங்குகிறது. தொடர்ந்து 6:30 மணிக்கு திருவடி புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம் பாராயணம், 8:30 மணிக்கு மகா யாகசாலை வேள்வி, மகா அபி ேஷகம், ராஜ அலங்காரம் நடக்கிறது.
மதியம் 12:30 மணிக்கு மகா தீபாராதனை, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம், மாலை 6:00 மணிக்கு சற்குரு கணபதி சுவாமிகளின் வழி அடியார்களின் அடியார் பூஜை நடக்கிறது.