/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை
/
சற்குரு ஓம் சித்தர் மகா குரு பூஜை
ADDED : செப் 01, 2025 07:02 AM

புதுச்சேரி : புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓங்கார ஆசிரமத்தில், மயிலாடுதுறை சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் 62வது ஆண்டு மகா குரு பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி, சற்குருவிற்கு நுண்மை அபிஷேகம், மகர ஜோதி தரிசனம், சற்குரு ஆசி வழங்கல் நடந்தது. தொடர்ந்து, சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் அகண்ட நாமாவளி அர்ச்சனை, ஜெபம், பஜனை, தியானம், மகா மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடந்தது.
மாலை சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் 'சற்குரு மகிமை' தலைப்பில் சிறப்பு அருளுரைகள் நடந்தது. ஓங்கார ஆசிரமம், ஓங்கார தலைமை பீட மகாதிபதி சுவாமி ஓங்காரநந்தா தலைமை தாங்கினார்.
ஓங்கார ஆசிரம அதிபர் சுவாமி கோடீஸ்வரானந்தா, யு.எஸ்.ஏ., சத்யநாராயணன், காஞ்சிபுரம் கருணாகரன், கடலுார் உலகேஸ்வரி, தங்கமுத்து ராம்குமார், சட்ட ஆலோசகர் நீதிக்குமார், பிரேமலதாதேவி ஆகியோர் சிறப்பு அருளுரைகள் வழங்கினர்.
இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.