/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளியில் சத்சங்க பஜனை
/
விவேகானந்தா பள்ளியில் சத்சங்க பஜனை
ADDED : ஜன 19, 2026 05:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் சார்பில் சத்சங்க பஜனை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
லாஸ்பேட்டை ராசு உடையார் தோட்டத்தில் ராமகிருஷ்ண மடம் 5 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் பிரமாண்டமாக புதிய ராமகிருஷ்ண மடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் புதுச்சேரி பொது மக்களின் பங்களிப்பை ஏற்கும் பொருட்டு சத்சங்க பஜனை லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சத்ய ஞானானந்தா சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் கோவிந்த புர பாகவதர்ஸ்ரீநாத் தாசின் பஜனை நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம், செல்வகணபதி எம்.பி., தர்ம சம்ரக் ஷண சமிதி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

