/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கரப் உடை விவகாரம் : கவர்னருக்கு மனு
/
ஸ்கரப் உடை விவகாரம் : கவர்னருக்கு மனு
ADDED : அக் 29, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மருத்துவ மாணவர்களை ஸ்கரப் உடை அணிய கட்டயாப்படுத்த கூடாது என மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்பரமணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், கவர்னருக்கு அனுப்பிய மனு:
புதுச்சேரியில் சில மருத்துவ கல்லுாரிகள், வகுப்பறை மற்றும் வெளிநோயாளிகள் பிரிவில் ஸ்கரப் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உடை அணியாத மாணவர்களுக்கு அபராதத்தை சில தனியார் கல்லுாரிகள் திணித்துள்ளது.
தேசிய மருத்துவ கவுன்சில் ஸ்கரப் உடை அணிவது கட்டாயம் என்று குறிப்பிடவில்லை. அதனால் மாணவர்களிடம் அபராதம், தண்டனை விதிக்கக் கூடாது என, சுகாதாரத்துறை உத்தரவிட வேண்டும்.

