/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
300 முதியோர்களுக்கு உதவித்தொகை ஆணை
/
300 முதியோர்களுக்கு உதவித்தொகை ஆணை
ADDED : அக் 20, 2025 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை தொகுதியில் 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர், விதவை, முதிர் கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் என 10 ஆயிரம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மதகடிப்பட்டில் உள்ள திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 300 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணையை அங்காளன் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், ஜே.சி.எம்., மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.