
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சொசியத் புரோக்ரசித் உயர்நிலைப்பள்ளியின் 145வது, நிறுவனர் தினம் மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் திருமலைவாசன் தலைமை தாங்கினார். அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வு, வரலாறுக்கு பங்களித்தன்மைகாக பேராசிரியர் ராமானுசம், பிரெஞ்சு இலக்கியங்களை தமிழிலும், சங்க இலக்கியங்களை பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்தமைக்கும், பேராசிரியர் வெங்கடசுப்புராயர், கல்வெட்டு ஆய்விற்காக வெங்கடேசன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், சங்க தலைவர் வேதாந்தம், பேராசிரியர் சச்சிதானந்தம், இளமுருகன், சங்க உறுப்பினர் பிரபாகரன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

