நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரையில் பள்ளி மாணவி மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மோட்சகுளம் அடுத்த சின்னகுப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் சிவா. டிரைவர். இவரது மகள் சுபஸ்ரீ 17, இவர் மடுகரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி காலை மடுகரையில் உள்ள அவரது பாட்டி விடான பெரிய நாயகி வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து மாலை வீட்டிற்கு செல்வதாக பாட்டியிடம் கூறிவிட்டு சென்றவர்.
சின்னக்குப்பம் வீட்டிற்கு சுபஸ்ரீ செல்லவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.