ADDED : ஜூலை 02, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: தோழி விட்டிற்கு சென்றதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கரியமாணிக்கம் அவ்வை நகரைச் சேர்ந்தவர் பழனி, 36; டிரைவர். இவரது மகள் தவமித்ரா 16, அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை அவரது தோழி வீட்டிற்கு சென்று வீட்டிற்கு வந்தார். அதனை தாய் விஜி கண்டித்தார். இதனால் மனமுடைந்த தவமித்ரா வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டு நைலான் சேலையால் துாக்கிட்டு கொண்டார்.
உடன் அக்கம் பக்த்தினர் உதவியுடன் அவரை மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவமைனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.