ADDED : ஜன 21, 2026 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தாவரவியல் பூங்காவில் துப்புரவு பணி மேற்கொண்டனர்.
பள்ளியில் இயங்கி வரும் இளைஞர் மன்றம் மற்றும் சூழல் மன்றம் மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் மன்றத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, தாவரவியல் பூங்காவில் வேளாண் அதிகாரி கோகுல லட்சுமி மேற்பார்வையில் துப்புரவு பணியினை மேற்கொண்டனர்.
ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மரிய மார்டின், ஆசிரியைகள் இந்துமதி, இந்திரா, ரீட்டா மேரி ஆகியோர் செய்திருந்தனர்.

