/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
/
விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
ADDED : ஜூன் 03, 2025 12:10 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டதால், ஆர்வத்துடன் வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2024-25ம் கல்வி ஆண்டில், படித்த மாணவர்களுக்கு மார்ச் 22ம் தேதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், 2025-26ம் கல்வி ஆண்டில், புதிய வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கியது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஏப்ரல் 28ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அதே போல, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், கல்வித்துறை அறிவித்தப்படியே நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
நேற்று பள்ளிக்கு காலையிலேயே ஆர்வத்துடன் வந்த மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றார். தொடர்ந்து, அரசு பள்ளிகளில், மாணர்களுக்கு காலையில் வழக்கம் போல, பால், பிஸ்கட் வழங்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, அந்தந்த பள்ளி அருகே போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு ஈடுபட்டனர்.