/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்
/
சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்
ADDED : டிச 06, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அதற்கு மாற்று தினங்களில் வேலை நாட்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழையால், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த வேலை நாட்களை, ஈடு செய்யும் வகையில், வரும் 7ம் தேதி (புதன் கிழமை பாடத்திட்டம்), 14ம் தேதி (வியாழக்கிழமை பாடத்திட்டம்) 21ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும். 21ம் தேதி சனிக்கிழமை செய்முறை தேர்வு - 3 நடைபெறும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.