/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
/
30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஆக 27, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : துணை தாசில்தார் பணிக்கான போட்டிதேர்வை முன்னிட்டு, அரசு, தனியார் பள்ளிகளுக்கு வரும் 30ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில், துணை தாசில்தார் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு வரும் 31ம் தேதி அரசு, தனியார் பள்ளிகளில் நடக்கிறது. இதையொட்டி வரும் 30ம் தேதி அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவ., 29ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு 30ம் தேதி நடக்க இருந்த 2ம் பருவதேர்வு, ஒரு நாள் முன், 29ம் தேதி மதியம் நடத்தப்படும்.

