/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிவியல், கைவினை பொருட்கள் கண்காட்சி
/
அறிவியல், கைவினை பொருட்கள் கண்காட்சி
ADDED : நவ 16, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம், தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி யில் அறிவியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கணபதி முன்னிலை வகித்தார்.
துணை இயக்குநர் ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அமரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி, உறுப்பினர் நடராஜன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனிதா, ரஹமத் பீவி, பூங்கொடி, சுகந்தி, செல்வராசு அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.
மாணவர்களின் 450க் கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.
பொறுப்பாசிரியர் சுகன்யா நன்றி கூறினார்.

