ADDED : மே 24, 2026 06:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் வீதியில் அமைந்துள்ள சைவ ஆராய்ச்சி மையத்தின் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, விஞ் ஞான பைரவம் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மார்க்டிஸ்கோஸ்கி. இவர், காசியில் வாழ்ந்து பல சைவாகமங்கள், சைவ நுால்களை ஓலை சுவடிகளில் இருந்து பதிப்பித்தார். அவர் விஞ்ஞான பைரவம் எனும் நுாலை சமஸ்கிருதம் மொழியிலும், ஆங்கிலத்திலும் விரிவான குறிப்புகளுடன் தொகுத்து உருவாக்கினார்.
இந்நுால் வெளியீட்டு விழா புதுச்சேரி அரவிந்தர் வீதியில் உள்ள சைவ ஆராய்ச்சி மையத்தில் நடந்தது.
டாக்டர் கணேசன் தலைமை தாங்கினார். கவுரிசங்கரசிவம், நரேந்திர சிவம், அரவிந்தசிவம் ஆகியோர் சைவ சிந்தாந்த நுால் குறித்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சைவ ஆராய்ச்சி மையம் வருங்காலத்தில் ஓலைச்சுவடியில் உள்ள சைவாகமம், சைவாசித்தாந்தம் சார்ந்த நுால்களை திருத்திய பதிப்பாக குறிப்புரையுடன் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
