ADDED : பிப் 15, 2026 06:40 AM

புதுச்சேரி: ஆல்பா மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஏஞ்சலின் தேவகுமாரி, ஆல்பா பொறியியல் கல்லுாரி தலைமை நிர்வாக அலுவலர் தீபிகா பங்கேற்றனர்.
கண்காட்சியில், மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு முறை, சூரிய குடும்பம், மனித உடல் அமை ப்பு, மின்சாரம், பசுமைச்சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு சாதனங் கள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். இந்த படைப்புகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
