/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 01, 2025 02:06 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியி ல், நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் படைப்புகள், பார்வையாளர்களை கவர்ந்தது.
பள்ளியில் நேற்று நடந்த கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் (பெண் கல்வி) ராமச்சந்திரன் பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வாணி தலைமை தாங்கினார். நடுவர்களாக ராஜ்குமார், மணிகண்டன், விஜய், சதிஷ் ஆகியோர் படைப்புகளை தேர்வு செய்தனர்.
அறிவியல் சிந்தனையை துாண்டும் வகையில், புதுமையான படைப்புகளை மாணவர்கள் அமைத்திருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

