UPDATED : அக் 10, 2026 08:45 PM
ADDED : அக் 10, 2026 08:40 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்டம் –1 துணை ஆய்வாளர் அனிதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை பயிலும், மாணவர்கள், பல்வேறு வகையான அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
நடுவர்கள் மல்லிகா, ராஜ்குமார் ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியில், பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் பங்கேற்றனர்.
