/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 10, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஸ்கர் எம்.எல்.ஏ., கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை, மரி மரிகரித் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜோஷி தேக்லா மேரி வரவேற்றார். 150க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், டாக்டர் ஆறுமுகம், சிவக்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

