/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுக்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
காட்டுக்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
காட்டுக்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
காட்டுக்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 14, 2025 02:19 AM

பாகூர்: காட்டுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, கைவினை பொருட்கள் கண்காட்சி, பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா என, முப்பெரும் விழா நடந்தது.
விழாவினை, பள்ளி கல்வி மூன்றாம் வட்ட துணை ஆய்வாளர் வாஞ்சிநாதன், தலைமையாசிரியர் வானதி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கண்காட்சியில் இடம் பெற்ற படைப்புகளை பார்வையிட்டு, அது தொடர்பான விளக்கங்களை மாணவர்களிடம் கேட்டு பாராட்டினார்.
மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில், 100க்கும் மேற்பட்ட மாதிரிகள் மற்றும் திட்டங்களை தயாரித்து காட்சிப்படுத்திருந்தனர்.
இதனை, மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் தேவி, ஜானகி, நித்யா, செந்தமிழ்செல்வி, ஜெயா, சங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.