/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேட்டில் அறிவியல் கண்காட்சி
/
சேலியமேட்டில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 28, 2025 04:42 AM

பாகூர்: சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, இந்தியன் வங்கி சேலியமேடு கிளை மேலாளர் கன்ஷியம் சன்வாரியா அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். 1977ம் ஆண்டு இப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் குமாரவேல் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர். மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளை ஏழு பள்ளிகளைச் சேர்ந்த 550 மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை, அறிவியல் ஆசிரியர்கள் சரவணன், செந்தில்முருகன் மற்றும் செல்வகுமரன், பெருமாள், கணேசன், சித்திரைச்செல்வி, புஷ்பலிங்கம், சுந்தரி, செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

